தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் தென்னங்கன்றுகள் விற்பனை

கலெக்டர் தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைகளில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டேனிஷ்பேட்டை அரசு தென்னை நாற்று பண்ணையில் 65 ஆயிரம் நெட்டை ரகம், 14 ஆயிரத்து 500 நெட்டை, குட்டை ரகம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று கருமந்துறை பழப்பண்ணையில் 13 ஆயிரம், அரசு தோட்டக்கலை பண்ணையில் 12 ஆயிரம், மணியார்குண்டம் பண்ணையில் 23 ஆயிரம் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story