லீ ஷாவ்லின் குங்பூ சங்கம் சார்பில் தேசிய தற்காப்பு கலை போட்டிகள்
Salem (west) King 24x7 |30 Aug 2024 8:44 AM GMT
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
சேலத்தில் லீ ஷாவ்லின் குங்பூ அனைத்து தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு சங்கம் சார்பில் ஜெயராணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 3-வது தேசிய அளவிலான உலக தற்காப்பு கலை போட்டிகள் நடந்தது. சங்க தலைவர் கே.பழனிவேல், செயலாளர் பி.ரவிக்குமார் தலைமை தாங்கி போட்டிகளை நடத்தினர். 4 பிரிவுகளாக நடந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக மேயர் ராமச்சந்திரன், ஜிம் பிரதீப், சுந்தரமூர்த்தி மற்றும் ஜெயராணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ஜோதிமேரி, துணை முதல்வர் ஜெனிட்டா, அலுவலக தலைமை செயலாளர் லீமா, லீ ஷாவ்லின் குங்பூ அனைத்து தற்காப்பு கலை நிர்வாக இயக்குனர்கள் மணிகண்டன், ெஜயராமன், சரவணன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story