பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்

பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்
பாரமரிப்பின்றியும் கழிவுநீர் தேங்குமிடமாகவும் மதுபிரியர்களின் கூடாரமாக மாறும் சூழல் என பல்வேறு பிரச்னைகளோடு காட்சியளிக்கிறது திண்டுக்கல் லிங்கம்மாள் குளம்.திண்டுக்கல் - தாடிகொம்பு மெயின் ரோடு ஆர்.எம்.காலனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக இருந்தது லிங்கம்மாள் குளம் .இந்த குளத்தை பொறுத்தவரையில் 10 ஆண்டுகளாக மாசுபட்டு வருகிறது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும் இந்த குளம் தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குளத்தின் 4 மூலைகளிலும் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளியிலிருந்து கழிவுகள் குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் குளம் மாசுபட்ட கழிவுநீருடன் காட்சியளிக்கிறது. அதோடு செடிகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளன. குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள சமீபத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இது என்னவோ மதுப்பிரியர்களுக்கு வசதியாகி விட்டது. இரவு நேரங்களில் மது கூடாரமாக மாறுகிறது. மழை பெய்தால் கொசு உற்பத்தியாகும் இடமாகிறது. அருகிலே தனியார் பள்ளியும் இருக்கிறது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். வரும் காலம் மழைக்காலம் என்பதால் இதனை கவனத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Next Story