விளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா, உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
Arani King 24x7 |30 Aug 2024 10:06 AM GMT
ஆரணி. ஆக 30 ஆரணி ஒன்றியம் விளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா, உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
ஆரணி ஒன்றியம் விளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது. கலை திருவிழாவில் தலைமை ஆசிரியர் கு.ஸ்ரீபிரியா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் கலைத் திரு விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர். சந்தியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். கலைத் திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தலைப்பு கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. "விவசாயத்தை காப்போம், பாதுகாப்போம்" என்ற தலைப்பில விவசாயிகளைப் போல மாறுவேடமிட்டு மாணவர்கள் விவசாயத்தைப் பற்றி கூறினர். மற்றும் நெகிழியின் தீமைகள் குறித்து மாணவர்கள் பேசினர். நாம் அனைவரும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என மாணவர்கள் கருத்துக்களை பேச்சு போட்டி மூலம் தெரிவித்தனர். குடிநீரை வீணாக்க கூடாது குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்களை வீணாக்க கூடாது மரம் செடிகளை நட்டு வளர்க்க வேண்டும் என சில கருத்துக்களையும் மாணவர்கள் பாடல்கள் மூலம் எடுத்து கூறினர். மரங்களைப் போல மாணவர்கள் வேடமிட்டும், மரங்களின் பயன்பாடு மரங்களை வெட்டக்கூடாது என்பதை பற்றியும் மேலும் மூலிகைச் செடியின் பயன்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு கருத்துகளை எடுத்துக் கூறினர். மரம் நடுவோம் மழை பெறுவோம் என அனைவருக்கும் அறிவுரை கூறப்பட்டது. மேலும் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் மாணவர்கள் மூலம் மரங்களும், செடிகளும் நடப்பட்டது. இறுதியாக உதவிஆசிரியர் ரா. எலன்சோபியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து அறிவுரைகளையும் கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி விழா இனிதே முடிவடைந்தது. மேலும் 12 மணி அளவில் உணவுத்திருவிழாவும் கொண்டாடப்பட்டது மாணவர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் சமைத்த உணவுப் பொருட்களை கொண்டு வந்திருந்தனர் இதில் கேழ்வரகு அடை த திணையில் செய்த இட்டலி மூக்கடலை காராமணி சுண்டல் காய்கறிகள் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்தரிக்காய் பொரியல் சாம்பார், ரசம் கொண்டைக்கடலை கார குழம்பு சுரைக்காய் கூட்டுதயிர் சாதம் எலுமிச்சை சாதம் புளி சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம்கேழ்வரகு களிபோன்ற உணவுகளை மாணவர்கள் எடுத்து வந்திருந்தனர்மேலும் ரவா கேசரியும் எடுத்து வந்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் மேலும் சுய உதவி குழு உறுப்பினர் R.சந்தியா அவர்களும் மாணவர் பெற்றோர்களும் NILP உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்
Next Story