திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்திற்காக போட்டி போட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களால் பொதுமக்கள் அவதி!

"என் இடத்தில் நீ ஏன் நிறுத்தினாய்" பேருந்து நிறுத்துமிடத்திற்காக போட்டி போட்ட தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள். ஒரு மணி நேரம் பயணிகள் அல்லல் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் சோமனூர் செல்லும் பேருந்து நின்றதால் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அரசு பேருந்தை வழியில் நிறுத்தியதால் குறிப்பிட்ட சோமனூர் தனியார் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  சுமார் ஒரு மணி நேரமாக வாக்குவாதம் நீடித்ததை தொடர்ந்து திருப்பூர் தெற்கு புற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து ஓட்டுநர்கள் இடையே சமரசம் ஏற்படுத்தினர். மேலும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பேருந்துகளை நிறுத்துமாறும் அனுமதிக்கப்படாத இடங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டாம் எனவும் தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் எச்சரித்தனர்.  பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக சோமனூர் செல்லும் தனியார் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பயணிகள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Next Story