பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சடலத்தை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீண்டும் சடலமாக அதே ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட சோக சம்பவம்!
Tiruppur (North) King 24x7 |30 Aug 2024 10:38 AM GMT
திருப்பூர்-பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சடலத்தை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீண்டும் சடலமாக அதே ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
பீகார் மாநிலம் பாட்னா விற்கு சடலத்தை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீண்டும் சடலமாக அதே ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மங்களம் உப்பு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (38), தனது மனைவி, மகன், மகள் மற்றும் தாயாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர் பெருமாநல்லூர் பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த நிலையில் தனது வருமானத்தில் குடும்பத்தை தனியாக நடத்தி வந்தார். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் பொள்ளாச்சியில் பணி செய்து போது இறந்து விட்டார் இவரது உடலை ஆம்புலன்ஸ் மூலமாக அபுதாஹிர், மற்றொரு ஓட்டுநர் சேக் மொய்தீன் என்ற இருவரும் கொண்டு சென்றனர் கடந்த 23 ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து உடலை கொண்டு சென்ற இவர்கள் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு 26 ஆம் தேதி பாலகுமார் உடலை பாட்னாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் திரும்பி வரும் வழியில் பாட்னா அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு புறப்பட நினைத்து குளத்தில் இறங்கினர் அப்போது எதிர்பாராத விதமாக அபுதாஹிர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் அபுதாகீர் உடலை மீட்ட ஷேக் மொய்தீன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு அபுதாகிர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அபுதாகிர் உடலை ஷேக் மொய்தீன் அதே ஆம்புலன்ஸில் திருப்பூருக்கு கொண்டு வந்தார். இறந்தவர் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீண்டும் அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் சடலமாக கொண்டுவரப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அபுதாஹிர் மகன் மற்றும் மகள் இருவரும் படித்து வரும் நிலையில் தாயார் இருதய சிகிச்சை செய்து வருவதாலும் மனைவியும் பணிக்கு செல்லாத நிலையில் அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story