சிபிஎஸ்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Maduranthakam King 24x7 |30 Aug 2024 12:07 PM GMT
சிபிஎஸ்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆலம் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பள்ளியில் பயிலும் மழலை செல்வங்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கிருஷ்ணர் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர். இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மழலை செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story