நாமக்கல்லில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
Namakkal King 24x7 |30 Aug 2024 12:10 PM GMT
தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க கோரி நாளை (ஆகஸ்ட் -31) சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நாமக்கல் பஸ்டாண்ட் மினி பேருந்து நிற்கும் இடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்! -
கள்ளுக்கு உண்டான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க கோரி நாளை (ஆகஸ்ட் -31) சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நாமக்கல் பஸ்டாண்டு மினி பேருந்து நிற்கும் இடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும், இதில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் நடைபெறும். என்று அதில் தெரிவித்துள்ளார்.
Next Story