முத்தூர் பூச்சாமி தமிழ்நாடு கயிறு சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக தேர்வு
Tiruppur King 24x7 |30 Aug 2024 1:30 PM GMT
தமிழ்நாடு கயிறு சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக முத்தூர் ராகவேந்திரா காயர் பூச்சாமி தேர்வு
தமிழ்நாடு கயிறு சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக முத்தூர் ராகவேந்திரா காயர் பூச்சாமி தேர்வு கோவையில் நடந்த தமிழ்நாடு அரசு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு கயிறு சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக முத்தூர் ராகவேந்திரா காயர் பூச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது பற்றிய அவர் கூறியதாவது தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 4350 தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியோடு செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் விவசாயம் சார்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கிராம தொழில் ஆகும். மேலும் இந்த தொழில் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பை வழங்கி கிராமப்புற பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் அதிக வேலை வாய்ப்பு பெற்று பயன் அடைந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தென்னை நார் சார்ந்த மொத்தம் 29 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு கயிறு சங்கங்களின் கூட்டமைப்பு, தென்னை நார் சங்கங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கவும் மத்திய மாநில அரசுகளின் தொழில் கொள்கைகளை சங்கங்களிடம் தெரியப்படுத்தவும், தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் கோரிக்கைகளை அரசிடமும் அரசு அதிகாரிகள் குழுவினரிடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்று தரவும் மிகவும் உறுதுணையாக செயல்படும் என்றார். முத்தூர் பூச்சாமி ஏற்கனவே தமிழ்நாடு அரசு கயிறு வாணிக மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story