எலி பேஸ்ட் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
Virudhachalam King 24x7 |30 Aug 2024 1:41 PM GMT
வயிற்று வலியால் அவதிப்பட்டதால் விபரீத முடிவு
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள விஜய மாநகரம், புது இளவரசம்பட்டு பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் கோவிந்தசாமி (வயது.72). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி, சர்க்கரை, உப்புநீர் காரணமாக சிறுநீர் சரியாக வெளியேறாமல் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 28-ஆம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்ததை பார்த்த அவரது உறவினர்கள் உடனே அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனலின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story