திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் இந்து அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம்
Dindigul King 24x7 |30 Aug 2024 2:49 PM GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் இந்து அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7 தேதியன்று நடக்க உள்ளது. இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது இயல்பு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் இந்து அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் புறநகர் DSP. சிபி சாய் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் சிவசேனா தமிழகம் சார்பாக மாநில தலைவர் C.K.பாலாஜி, மாநில இளைஞரணி அமைப்பாளர் தன்விக் அர்ஜுன், இந்து மக்கள் கட்சி மாநில துணைப் பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா, மாநில தொண்டரணி தலைவர் மோகன், இந்து தர்மசக்தி& பாரத் சேனா சார்பாக மாவட்ட செயலாளர் மகேந்திரன் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story