முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
Virudhachalam King 24x7 |30 Aug 2024 2:50 PM GMT
வாலிபர் கைது
விருத்தாசலம், ஆக.31- விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ஜமுனா (வயது 32). இவருக்கும் பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அலமேலு என்பவரது குடும்பத்திற்கும் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி கருவேப்பிலங்குறிச்சியில், ஜமுனாவும் அவரது மகனும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அலமேலு மகன் நவீன் (22), என்பவர் இருவரையும் அசிங்கமாக திட்டி ஜமுனாவின் தலை முடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஜமுனா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜமுனா கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story