விருத்தாசலத்தில் பலத்த மழை
விருத்தாசலத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதேபோல இன்று காலையில் இருந்து கடுமையான வெயில் அடித்த நிலையில் திடீரென இரவு 8 மணிக்கு மேல் வானம் இருண்டு சூறாவளி காற்றுடன் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. பகலில் வெயில் காரணமாக உருக்கத்தில் அவதிப்பட்ட மக்களுக்கு இரவில் மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story