வரசித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
Tiruvallur King 24x7 |30 Aug 2024 4:24 PM GMT
பொன்னேரி அருகே பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
பொன்னேரி அருகே பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சாலை பணிகளால் கோவில் தாழ்வாக சென்ற நிலையில் ஜாக்கி உதவியுடன் 6அடி உயரத்திற்கு மேலே எழுப்பப்பட்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story