பாதையை மறைத்து சுவர் எழுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம்
Dharapuram King 24x7 |30 Aug 2024 4:34 PM GMT
பாதையை மறைத்து சுவர் எழுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம்
பாதையை மறைத்து சுவர் எழுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் தாராபுரம் அருகே உள்ள சகுனி பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் நாச்சான் என்ற நாச்சி.இவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு அரசால் வீட்டுமனை பட்டா கொடுத்து அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டைச் சேர்ந்த நபர்கள் பொது வழி பாதையை தடுத்து நிறுத்தி நாச்சி வீட்டில் இல்லாத போது தடுப்புசுவர் கட்டி பொது பாதையை மறைத்து சுவர் எழுப்பினர். இதனால் நாச்சி மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிஅடைந்தனர். இதுகுறித்து கடந்த மாதத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற 30 ஆம் தேதி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதாகஅறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்ற் காலை 11 மணி அளவில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காந்தி சிலை முன்பு அண்ணா உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார்,வருவாய்துறையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டதாகவும், விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் பாதையை தடுப்பு சுவர் குறித்து பேசி முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story