பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் அமைச்சர் உத்தரவு கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு
Dharapuram King 24x7 |30 Aug 2024 4:37 PM GMT
பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் அமைச்சர் உத்தரவு கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு
பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் அமைச்சர் உத்தரவு கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலையான பல்லடம் - தாராபுரம் சாலையில் 25.00 கி.மீ நீளமுள்ள சாலை இருவழித்திடலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. குண்டடம் முதல் தாராபுரம் சாலை சந்திப்பு வரையிலான 5.00 கி.மீ நீளமுள்ள சாலை பகுதியினையும் அகலப்படுத்தித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக முதலைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இச்சாலையை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.39கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இப்பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் விரைந்து முடிப்பது குறித்தும் தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் அன்மையில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பணிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு உட்பட அனைத்தையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணித்தளத்தில் சாலைப்பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். அதனை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பணிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு உட்பட அனைத்தையும் ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு கண்காணிப்பு பொறியாளர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது,தாராபுரம் கோட்டப்பொறியாளர் ராணி,மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story