மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு

மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு
கடையடைப்பு
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகளை விரைவாக முடிக்க கோரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், மூங்கில்துறைப்பட்டில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வணிகர் சங்கத் தலைவர் தர்பார் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், தொகுதி செயலாளர் ஜெயபால், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர்கள் கடையை பூட்டி கருப்பு கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை பணி மந்தமாக நடப்பதால், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். பணியை விரைந்து முடிக்கக் கோரி, கோஷமிட்டபடி, மூங்கில்துறைப்பட்டு, வாழவச்சனுார் அனைத்து வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் ஊர்வலமாக அண்ணா நகரில் இருந்து நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் நெடுஞ்சாலை துறை பொறியாளர் சிவசுப்ரமணியம், துணைப் பொறியாளர் சர்மா, டி.எஸ்.பி., குகன், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், ஆகியோர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story