ஆதரவற்றோர் மையத்தில் மூதாட்டி ஒப்படைப்பு

ஆதரவற்றோர் மையத்தில் மூதாட்டி ஒப்படைப்பு
ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சியில் ஆதரவின்றி மயங்கி கிடந்த மூதாட்டியை ஆதரவற்றோர் மையத்தில் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரரை பொதுமக்கள் பாராட்டினர்.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கடந்த 3 நாட்களாக 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியார் வங்கி அருகே கவனிப்பாரின்றி மயங்கி கிடந்தார். இதை பார்த்த ஊர்க்காவல் படைவீரர் சரவணன், அவருக்கு தண்ணீர், உணவு கொடுத்து பராமரித்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இயங்கும் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் ஹோம்லெஸ் பார் எல்டர்லி எனும் ஆதரவற்றோர் மையத்திற்கும் தகவல் அளித்தார். மையத்தை சேர்ந்த உதவியாளர்கள் இருவர், மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலமாக ஆதரவற்றோர் மையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் என்பதும், இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள், இவரை கோவிலுக்கு கூட்டி செல்வதாக கூறி, அழைத்து வந்து கடந்த சில தினங்களுக்கு முன் பஸ் மூலம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள் ளார். இதனால் ஆதரவின்றி தவித்த இவர், உணவின்றி மயங்கி கிடந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு, ஆதரவற்றோர் மையத்தில் ஒப்படைத்த ஊர்க்காவல் படைவீரரை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story