காங்கேயத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா
Tiruppur King 24x7 |30 Aug 2024 11:52 PM GMT
காங்கேயம் 10வது வார்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா
காங்கேயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக அனைத்து தெருக்களிலும் குடிநீர் பிரச்சினையை தடுக்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வார்டு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க உப்பு தண்ணீர் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காங்கேயம் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர திருப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் 10வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சரவணன் முன்னிலை வகித்தார். பின்னர் பூஜை செய்யப்பட்டு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அர்ஜுனன், கணேசன், சிவப்பிரகாஷ் மற்றும் 10வது வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story