சங்கரன்கோவிலில் திமுக நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

சங்கரன்கோவிலில் திமுக நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
திமுக நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நகர பொது உறுப்பினர் கூட்டம் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி மாவட்ட பொருளாளர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story