ராமநாதபுரம் நெகிழி மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்கும் பேரனை நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |31 Aug 2024 2:40 AM GMT
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் மற்றும் வேலு மாணிக்கம் மற்றும் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் நெகிழி பிளாஸ்டிக் தவிர்ப்பும் பேரணி நடைபெற்றது
ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் , தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, வாணி வேலு மாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இன்று நடைபெற்ற இராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற நெகிழி தவிர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு துவக்கி வைத்தார். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் Dr. ரம்யா தினேஷ் மற்றும் Dr. ரமனீஸ்வரி ஆகியோர் துணிப்பைகளை வெளியிட வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடம் நெகிழி தவிர்ப்போம் என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்று துணிப் பைகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணையானது அரண்மனையில் துவங்கி மத்திய கொடி கம்பம் வண்டிக்கார தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வழியாக அண்ணா சிலை முன்பாக நிறைவுபெற்றது, இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் துணை ஆளுநர் சுகுமார் மற்றும் செயலர் அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் 600 மாணவர்களும் , ஏராளமான ரோட்டரி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Next Story