செம்மரக்கடத்தல் தொடர்பால் கண்ணமங்கலம் காவல் நிலைய எஸ்.ஐ சஸ்பென்ட்

X
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் காவல் நிலையம் எஸ்.ஐ ஆக கார்த்திகேயன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செம்மரக்கடத்தல் கும்பலிடம் எஸ்.ஐ கார்த்திகேயனுக்கு தொடர்பு இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி Dr.பிரபாகர் தகவல் தெரிய உடனடியாக எஸ்.ஐ கார்த்திகேயனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் எஸ்.ஐ கார்த்திகேயன் கண்ணமங்கலம் பகுதியில் சட்ட விரோதமான செயல்களுக்கு உதவியதாக ஏற்கெனவே எஸ்.பிக்கு தொடர்ந்து அவர் மீது புகார் சென்ற வண்ணம் இருந்தது.
Next Story

