கோவில் திருவிழாவில் பிரச்சனை மக்கள் மறியல்!

கோவில் திருவிழாவில் பிரச்சனை மக்கள் மறியல்!
பொது பிரச்சனைகள்
பொன்னமராவதி அருகே கோயிலில் கிடாவெட்டு பூஜை நடத்துவது தொடர்பான பிரச்னையில் வருவாய்த் துறையினர் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை மொங்காம்பட்டியில் உள்ள இரணிகால அய்யனார், படுத்தகுடி கருப்பர், கருப்பர், கோயிலில் பெரிய சின்ன கருப்பர் சுமார் 30ஆண்டுகளாக கிடாவெட்டு பூஜை நடத்துவதில் தரப்பினரிடையே இரு பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில்,இருதரப்பினரும் வேறு வேறு நாள்களில் கிடாவெட்டு பூஜை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒருதரப்பினர் கிடாவெட்டு கோயிலில் பூஜை செய்த நிலையில், மற்றொரு தரப்பினர் அரசமலை பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர்கைது செய்தனர். மறியலால் காரையூர் பொன்னமராவதி புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story