மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் விழிப்புணர்வு முகாம்
Perambalur King 24x7 |31 Aug 2024 3:59 AM GMT
விழிப்புணர்வு
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்காக செயல்படும் உள்ளடக்கிய கல்வி மையத்தில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார மைய டாக்டர் மவுனிகா ஸ்ரீ கலந்து கொண்டு மையத்தை பார்வையிட்டு குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் பற்றியும், - நோய் தாக்கங்கள், குழந்தைகளின் எதிர்காலம், ஆரம்ப நிலை • பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். வளர்ச்சி படிநிலைகளில் தாமதமாகவுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் தசைப்பயிற்சி, பேச்சுப்பயிற்சி, விளையாட்டு முறையில் வழங்கப்படும் அறிவுசார் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் ஆலோசனை வழங்கினார். பயிற்சி மையத்தில் பெறக்கூடிய பயிற்சிகளை தொடர்ந்து வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமராஜ், பெரம்பலூர்வட்டாரவளமைய மேற்பார்வையாளர் தேவகி, ஒருங்கிணைப்பாளர் கலைவாணன், ஆசிரியர் பயிற்றுனர், இயன்முறை டாக்டர் மற்றும் சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்
Next Story