பல இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை என புகார்

X

சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகரின் பல இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை என வார்டு உறுப்பினர்கள் புகார்
சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இளவரசி வரவேற்று பேசினார். முதல் தீர்மானமாக பிறப்பு இறப்பு குறித்து வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் தீர்மானம் வாசித்துக்கொண்டிருக்கும் போது திமுக வார்டு உறுப்பினர்கள் பழைய தெரு மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய விளக்குகள் பொருத்தியுள்ளீர்கள் பல இடங்களில் மின்விளக்குகள் பொருத்தாமல் உள்ளது. ஒரு வார்டுக்கு 7விளக்குகள்தான் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள், மின்விளக்குகள் எப்போது வரும் என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்து பேரூராட்சிமன்ற தலைவர் பிரதீபா பேசும்போது நிதி ஆதாரத்தை பொறுத்துதான் விளக்குகள் பொருத்தப்படும் என்றார். அப்போது திமுக வார்டு உறுப்பினர்கள் ஒரு மின்விளக்கு என்ன விலைக்கு சப்ளை செய்தார்கள் என கேள்வி கேட்டபோது தலைவர் பிரதீபா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ஒட்டுமொத்தமாக மாநில அளவில் டென்டர்விட்டு தொகையைமட்டும் கட்டச்சொல்வார்கள் நாங்கள் செலுத்திவிடுவோம் என்றார். அதன்பின்னர் திமுக 7வார்டு உறுப்பினர் ஹேமா பேசும் போது ஒவ்வொரு வார்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் போது பாரபட்சம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யுங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டும் ஒருசில வார்டுகளுக்கு மட்டும் கோடிகணக்கில் பேரூராட்சி நிதியை ஒதுக்கீடு செய்து நலத்திட்ட பணிகளை செய்கிறீர்கள் ஏன் இந்த பாரபட்சம் என்றார். அதற்கு பதில் அளித்து பேசிய தலைவர் திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு இருந்தால்தான் அந்த வார்டுக்கு நலத்திட்ட பணிகள் செய்ய முடியும் என்றார். அப்போது பேசிய 15வது வார்டு திமுக உறுப்பினர் ராஜீ அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சின்னாளபட்டியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அந்த பணிகளை நிறைவேற்றுங்கள் என சொல்லி 6மாதங்கள் ஆகியும் எனது வார்டில் எந்த ஒரு நலப்பணியும் நடைபெறவில்லை என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது எந்த வார்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளீர்கள் என்பதை எங்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தவும். அதற்கு பதில் அளித்த தலைவர் பிரதீபா கூட்டப்பொருளை வாசித்த கலைச்செல்வியிடம் அடுத்த கூட்டத்திற்கு வரும்முன் அந்தந்த வார்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் நலத்திட்ட பணிகள் நடைபெற்றிருக்கிறது என்பதை பிரின்ட் எடுத்து கொடுங்கள் என கூறினார். கூட்டத்தில் 18 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் செல்வக்குமாரி, சங்கரேஸ்வரி, வேல்விழி, ஹேமா, ஜெயக்கிருஷ்ணன், தாமரைச்செல்வி, காமாட்சி, சாந்தி, ராஜாத்தி, ராசு, ராஜசேகர், அமுல்ராஜ், சுப்ரமணி உட்பட 16 வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக துப்புரவு ஆய்வாளர் கனேசன் நன்றி கூறினார்.
Next Story