வடக்கு காவல் நிலையம் முன்பு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு காவல் நிலையம் முன்பு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 07.09.2024 அன்று நடைபெற உள்ளது அன்றைய தினம் இந்து அமைப்புகளை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் தரபினர் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம் அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டை குளத்தில் கரைப்பது வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் வரும் பத்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் அந்த நாட்களில் பாதுகாப்பு மற்றும் பிற பணிகளுக்காக காவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அன்றைய நாட்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி இந்து அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் இந்த சுற்றறிக்கை அனுப்பியதற்கு இந்து அமைப்பு தரப்பில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதை அடுத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி சிவசேனா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Next Story