மாவட்ட அபிராமி கூட்டுறவு நிர்வாக குழு பணி நிறைவு விழா
Dindigul King 24x7 |31 Aug 2024 5:59 AM GMT
மாவட்ட அபிராமி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நிர்வாக குழு பணி நிறைவு விழா பழனி ரோடு அலுவலகத்தில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட அபிராமி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், துணைத் தலைவராக மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளர் வி.டி ராஜன் உட்பட 21 நிர்வாக குழுவினர் பணிபுரிந்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 30ம் தேதி நிறைவு பெறுவதை ஒட்டி திண்டுக்கல் பழனி ரோடு பைபாஸ் அருகே அமைந்துள்ள கூட்டுறவுத்துறை திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைமை அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு துனைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பாலமுருகன் தலைமை தாங்கினார், மேலாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் தலைவர் பாரதி முருகன், துணைத் தலைவர் வி.டி.ராஜன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான, பாண்டி, சாந்திலால், ராஜேந்திரன், அமுதா, பூபதி, லட்சுமி, பிரியா, உமாமகேஸ்வரி, வெங்கட்டம்மாள், ராஜா, மணிகண்டன், நேரு, சுப்பையா, பிச்சை, சந்தானகிருஷ்ணன், ராஜபாண்டி, நடராஜன், வாசுதேவன், ஜான்இன்னாசி, ஆகியோருக்கு. சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிறைவாக வணிக மேலாளர் முருகன் நன்றி கூறினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் சிறப்பாக பணி புரிந்தமைக்காக வாழ்த்துக்களை பெற்றனர்.
Next Story