கோவிலூர் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவிலூர் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கோவிலூர் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் மதுரை வீரன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென அப்பகுதி மக்கள் முடிவு செய்த நிலையில் பல லட்சம் மதிப்பீட்டில் கோயில் புரைமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இந்தநிலையில், கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கோயிலில் நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள் நிறைவுபெற்றது. தொடர்ந்து, கடம்புறப்பாடு கோயிலைச் சுற்றி வலம் வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்தது. தெட்சிணாமூர்த்தி, கண்ணப்ப சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உட்பட கோவிலூர், ஆயிப்பட்டி, குப்பகுடி, பாத்தம்பட்டி, கரும்பிரான்கோட்டை, கே.வி.கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீசார் செய்திருந்தனர்.
Next Story