புளிச்சங்காடு கைகாட்டியில் துணிக்கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்.

X
ஆலங்குடி அருகேயுள்ள அணவயலைச் சேர்ந்தவர் பாஸ்கர் (42). இவர், புளிச்சங்காடு கைகாட்டி பேராவூரணி செல்லும் சாலையில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் மாடியில், பிரண்ட்ஸ் பார்க் என்ற துணிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணிக்கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், நேற்று காலை அருகில் கடைவைத்திருப்பவர்கள் துணிக்கடையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், பாஸ்கருக்கும் மற்றும் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் பூட்டியிருந்த கடையை திறந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இச்சம்பவம் மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

