சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் 

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் 
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் 
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்  தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பவர் பாயிண்ட முலம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விவேகம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜாராமன்(பொறுப்பு) தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவிகள் சாலையை உபயோகிக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என கூறினார். மோட்டார் வாகன ஆய்வாளர்  செந்தில்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கி, சாலை பாதுகாப்பு தொடர்பான காட்சிகளை மாணவ மாணவிகளுக்கு திரையிட்டு காண்பித்து, சாலையில் வாகனத்தில் செல்லும்போதும்நடந்து செல்லும்போதும் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்றுவிளக்கம் அளித்தார்.  இந்த நிகழ்ச்சி முடிவில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை கேட்டு அதற்கு மாணவ மாணவிகள் பதில்களை தெரிவித்தனர். இந்நிகழ்சிக்கு விவேகம் பள்ளிகளின் தாளாளர், பள்ளி ஆசிரியர்கள், ஸ்ரீதேவி ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர் பிச்சுமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியில் தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்  அமிர்தராஜ் நன்றி கூறினார்.
Next Story