ராமநாதபுரம் இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |31 Aug 2024 7:45 AM GMT
அம்ரிதா மருத்துவமனை குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் ஆர் எஸ் மடை கிராமத்தில் உள்ள அம்ரிதா பள்ளி வளாகத்தில் அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாமில் பங்கேற்றனர். முகாமின் போது, இதய அறுவை சிகிச்சை அல்லது பிற சிகிச்சைகள் தேவைப்படும் குழந்தைகள் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் இலவசமாக சேவைகளை பெறுவார்கள் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முகாம் அம்ரிதா மருத்துவமனை, ஜெனிசிஸ் அறக்கட்டளை, மற்றும் ஹெச்டிஎஃப்சி ஏர்கோவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முகாமை அம்ரிதா மருத்துவ கல்லூரி, கொச்சி, குழந்தை இதய மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர். கிருஷ்ணகுமார் தலைமையில் டாக்டர். பாலாஜி,ஶ்ரீமுருகன், டாக்டர். ப்ரிஜேஷ், டாக்டர் பாலாகணேஷ் மற்றும் டாக்டர் நிஷாந்த் ஆகியோர் நடத்தினர். இந்த முகாம் மாதா அமிர்தானந்தமயியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் 10வது முகாம். இதற்கு முன்பு விருதுநகர், நாகர்கோவில், மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
Next Story