சிந்தாமணிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது

சிந்தாமணிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது
சிந்தாமணிபட்டியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, சிந்தாமணிப்பட்டி பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று "நம் பள்ளி, நம் பெருமை" என்ற தலைப்பில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாயம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிந்தாமணிபட்டி கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஷாஜகான், பள்ளி ஆசிரியர்கள் திருமூர்த்தி, வீராசாமி ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயிற்றுனர் பொன்மலர் செல்வி பார்வையாளராகவும் பங்கேற்றார். மேலும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியர் தாயம்மாள், இது உங்களுடைய பள்ளி, உங்கள் குழந்தைகள் இங்கு படிப்பதற்கு தேவையான கற்றலும், கற்பித்தலும், அதற்கேற்ற சூழல்களும் அமைக்கப்பட்டுள்ளதா? என சரி பார்த்து எந்த மாதிரியான கட்டமைப்புகள் பள்ளியில் உருவாக்கினால், அது பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றும், என்பதை நாமே திட்டமிட்டு, அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும்போது தேவையான நிதி உதவிகளை நன்கொடையாகவோ, கல்வித் துறையிலோ, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்தோ, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ கேட்டு பெற்று அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். அதற்காகத்தான் இன்று இந்த கூட்டத்தை கூட்டி உள்ளதாக தெரிவித்தார்.
Next Story