உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட கூட்டம்
Udumalaipettai King 24x7 |31 Aug 2024 10:39 AM GMT
நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் உடுமலையில் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் உடுமலை - மடத்துக்குளம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,டி பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும், கருணை அடிப்படையில் மறைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் உடுமலை வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர் அதன்படி வட்டத் தலைவராக கிரி, துணைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக பரமேஸ்வரன், துணைச் செயலாளராக அழகிரி , பொருளாளராக கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதியாக பழனிச்சாமி, மற்றும் திருமதி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில சங்க ஆலோசகர்கள் மாரியப்பன், மகேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மடத்துக்குளம் வட்ட நிர்வாகிகள் கருப்புசாமி, பொன்னுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story