நீட் தேர்வில் டீக்கடை உரிமையாளர் மகன் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

நீட் தேர்வில் டீக்கடை உரிமையாளர் மகன் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்
அரசு பள்ளியில் படித்த மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம்
கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்று குளித்தலை அருகே கள்ளையை சேர்ந்த ராமசாமி - சிறும்பாயி தம்பதியரின் மகன் ஹரிஹரன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில்வதற்காக இடம் கிடைத்துள்ளது. இவரும் கடந்த 2021 22 ஆம் ஆண்டு ஜி. உடையாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை தனது வீட்டில் கூறியதும் அவரது பெற்றோர்கள் மற்றும் அவரது அக்கா கனகவல்லி ஆகியோர் அவருக்கு ஊக்கம் அளித்து தனியார் கோச்சிங் சென்டரில் அவரை பயிற்சியில் சேர்த்துள்ளனர். இரண்டு முறை குறைவான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்காத போதிலும் மனம் தளராத அவருக்கு அவரது குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தின் காரணமாகவும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாகவும் உத்வேகத்துடன் படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வில் எழுதி 627 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 15 ஆவது இடத்திலும் கரூர் மாவட்டத்தில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளார். மேலும் இவரது தந்தை, தாய் இருவரும் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர் தனது தாய் தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தியும் உள்ளார். அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் தங்களுக்கு இந்த மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகும் இதற்காக எங்களுக்கு உத்வேகம் அளித்த பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் தமிழ்நாடு அரசிற்கு தாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.
Next Story