ஜோதிவடத்தில் ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |31 Aug 2024 12:08 PM GMT
ஜோதிவடத்தில் ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
ஜோதிவடத்தில் ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள ஜோதிவடம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் அபிராமி வயது 17. இவர் கரூர் நகரப் பகுதியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 11 மணியளவில், வயிற்று வலி மீண்டும் அதிகமாகவே விரக்தி அடைந்த அபிராமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த பெரியசாமி வீடு திரும்பியபோது, தனது மக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அபிராமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story