பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
Tiruchengode King 24x7 |31 Aug 2024 12:16 PM GMT
பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பொள்ளாச்சி கயர் வாரிய மண்டல அலுவலகத்துடன் இணைந்து மூன்று நாட்கள் பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். தென்னை நார் வாரிய மண்டல அலுவலர் டி.வி. சாபு அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி, பிற கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சாதனை மற்றும் ஊக்கம் எனும் தலைப்பில் LAD2LEADER ஆலோசகர், பயிற்சியாளர் முனைவர் சம்பத்குமார் நந்தகோபாலன் நிகழ்வு குறித்து கலந்துரையாற்றினார். தென்னை நார் சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு.பூச்சாமி கயர் தொழில் உள்ள வாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் திரு. சிவராமன் தொழில்முனைவோருக்கான செயல்முறை என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி எஸ்.பாலுசாமி பொருட்களை சந்தைப்படுத்துதல் எனும் தலைப்பில் உரையாற்றினார். புதிய அலகுகள் தொடங்குவதற்கான மத்திய அரசின் திட்டங்கள் என்ற தலைப்பில் ஓய்வு உதவி இயக்குநர், கோவை விஜயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். சேலம் சுகுன் ஃப்பர்ஸ்ன் CEO திரு. நாகராஜ் தொழில்முனைவோர் அனுபவம் குறித்து ஆலோசனை வழங்கினார். டி.வி. சாபு கயறு வாரியத்தின் திட்ட சேவைகள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த மேலாளர் திரு.பி.சந்தோஷ்குமார் நிதி ஆதாரம் மற்றும் வங்கித் திட்டம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின் மூலமாக 75க்கும் மேற்பட்ட மாணவிகள் தானாக முன்வந்து தொழில் முனைவதன் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். மூன்றாம் நாள் நிகழ்வில் பல்வேறு தொழில் துறை வளாகங்களுக்கு களப்பணி சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Next Story