விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் முறைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமையில் நடந்தது
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர்,கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசனைக்கிணங்க விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களை முறைப்படுத்துதல் முன்மொழிவு குறித்து ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், திட்டக்குடி அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விருத்தாசலம் தொகுதியில் உள்ள சின்னவடவாடி, குப்பநத்தம், திட்டக்குடி தொகுதியில் கீரனூர், மேலூர், செங்கமேடு, துறையூர், காரையூர், மோசட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அதே பகுதியில் உள்ள மாற்று கட்டிடங்களில் செயல் படுத்த ஆலோசனை கேட்கப்பட்டது. அதேபோல் ஒரு வாக்கு சாவடி மையத்தில் 1500 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் அதற்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அதனைப் பிரித்து இரண்டு வாக்குச்சாவடி மையமாகவும் அமைக்க ஆலோசனை கேட்கப்பட்டது. முடிவில் அனைத்து கட்சியினரும் ஒப்புக் கொண்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேர்தல் பிரிவு கணினி இயக்குனர் சுரேஷ் நன்றி கூறினார்.
Next Story