விருத்தாசலம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்
Virudhachalam King 24x7 |31 Aug 2024 1:30 PM GMT
விருத்தாசலம் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்
விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் அருகே உள்ள கோ.மாவிடந்தல் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திருவிழாவின் போது இரு தரப்பில் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருதரப்பினர் இடையேயிலான அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கம்மாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் மற்றும் கோ .மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தற்பொழுது வழக்கம்போல் கோவில் திறந்து வழிபாடு செய்வது பொதுமக்கள் கோவில் சென்று பூஜை செய்வது போன்றவை வழக்கம் போல் செயல்பட வேண்டும். வருங்காலத்தில் திருவிழா நடைபெறும் காலத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே காவல்துறையினருடன் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி மேற்படி கோவில் திருவிழா எவ்வாறு நடத்துவது என தீர்மானித்து திருவிழாவினை நடத்த வேண்டும். மேற்கண்ட மூன்று உபயதாரர்களும் கோவில் திறந்திருக்கும் போது கோவில் திருவிழா சம்பந்தமாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பேசக்கூடாது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story