மங்கலம்பேட்டை அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலி செயின் அறுக்க முயற்சி

X
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள கலர்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பிரியா (வயது.21). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் காலனி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் தேவா (18) என்பவர், குடிபோதையில் பிரியாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தாலிச் செயினை அறுக்க முயன்றுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பிரியா கூச்சலிட்டுக் கொண்டே தேவாவைப் பிடித்து கீழே தள்ளி விட்டு விட்டு, அவரிடமிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து பிரியா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஆலடி போலீசார், தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

