ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
Rasipuram King 24x7 |31 Aug 2024 1:59 PM GMT
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இ கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் பிரதோஷம், சனி பிரதோஷம் போன்ற தினங்களில் ஸ்ரீ கைலாசநாதர் உடனுறை ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி அம்மாள், மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் தர்ம சம்வர்த்தினி தாயார் மற்றும் நந்தி பகவானுக்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ கைலாசநாதர் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாதர் உடனுறை ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி தாயார், நந்தி பகவான் உற்சவத்தில் பல்லாக்கில் கோவிலை சுற்றி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என கோஷங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் உற்சவருக்கும் ,நந்தி பகவானுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story