குமரியில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளம் பெண்கள் வீடியோ வைரல்
Nagercoil King 24x7 |31 Aug 2024 2:46 PM GMT
ரீல்ஸ் மோகம்
ரீல்ஸ் மோகம் என்ற பெயரில் இளைஞர்கள் மட்டுமல்ல இளம் பெண்களும் அதிவேகமாக பைக் ஓட்டுவது, லிவிங் செய்வது, போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சமீபகரமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணத்தில் இளம் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், ஆண்களுக்கு இணையாக அதிக சிசி கொண்ட பைக்கை மிகவும் லாபகமாக ஓட்டுவதும், கருப்பு நிற ஆடையுடன் முகக் கவசமும் கருப்பு நிறத்தில் அணிந்து அவர் பைக் ஓட்டும் காட்சி அந்த வழியாக செல்பவர்கள் ஆச்சரியத்தில் பார்க்கும் வகையில் இந்த ரீல்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. இதை போல் மற்றொரு இளம் வெளியிட்டுள்ள ரீலீஸ் வீடியோவில் குளச்சல் போலீஸ் நிலையத்தை தொடக்கத்தில் காட்டிவிட்டு, பில்லா படம் பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க இளம்பெண் பைக் ஓட்டும் காட்சி உள்ளது. அந்த இளம் பெண் ஹெல்மெட் அணிந்துள்ளார். கடந்த இரு நாட்களாக இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. போலீஸ் நிலையத்தை பேக்ரவுண்ட் மியூசிக்கல் காட்டி ரிலீஸ் வெளியிட்டு இருப்பது விதிமுறை மீறலாகவே பார்க்கப்படுகிறது. இந்த இளம் பெண்கள் குறித்து போலீஸ் விசாரிக்க தொடங்கியுள்ளது. விதிமுறைகளை மீறிய வகையில் இவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
Next Story