மாந்திரீகம் செய்வதாக வீடு புகுந்து நகை பணம் திருடிய பெண் கைது
Nagercoil King 24x7 |31 Aug 2024 3:11 PM GMT
திங்கள்நகர்
குமரி மாவட்டம் திங்கள்நகரில் வசித்து வருபவர் தேவிலட்சுமி (38). விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். தேவிலட்சுமி கைரேகை பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக பல பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மண்டைக்காடு புதூர் சி எஸ் ஆர் நகரை சேர்ந்த மரியே ஜேம்ஸ் மனைவி ஜேசு பிரபா (65) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. ஜேசு பிரபா வீட்டில் கைரேகை பார்க்க சென்ற போது, வீட்டில் பில்லி சூனியம் உள்ளது அதனை பரிகார பூஜை செய்து நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார். அதன்பேதில் சம்பவ தினம்பூஜையை தொடங்கி, ஏசு பிரபா அணிந்திருக்கும் நகைகள், பணத்தை பூஜையில் வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ஜேசு பிரபா தான் அணிந்திருந்த ஏழு பன் தங்கச் சங்கிலி, வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து வைத்துள்ளார். பூஜை தொடங்குவதற்கு முன்பு தேவிலட்சுமி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க ஜேசு பிரபா சமையலறை சென்றார். அவர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் அறையில் இருந்த தேலிலட்சுமி அங்கு இல்லை. நகையும் பணமும் மாயமாகி இருந்தது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மண்டைக்காடு போலீசில் ஜேசு பிரபா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தேவி லட்சுமியை கைது செய்தனர் தொடர்ந்து வருடம் விசாரணை நடைபெற்று .
Next Story