தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட மைய பொதுக்குழு கூட்டம்

பல்வேறு தீர்மானத்துடன் நடைபெற்றது
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட மைய பொதுக்குழு கூட்டம் பல்வேறு தீர்மானத்துடன் நடைபெற்றது ........ பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் அரங்கில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட மைய பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது, மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது, மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் விஸ்வநாதன் மற்றும் அரங்கபாண்டியன் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டிசிஎஸ் பணியினை அண்டை மாநிலங்களில் உள்ளவாறு அமல்படுத்திட வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கிட வலியுறுத்தியும் வழங்கப்படாதவை கண்டித்தும் நீதிமன்றங்களுக்கு எந்த தொடர்புமின்றி கிராம நிர்வாக அலுவலர்கள் செல்ல பணிக்கப்படுவதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வரும் செப்டம்பர் 17ம் தேதி அன்று மாலை கண்டன மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கூடத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story