தமிழ்நாடு வக்ஃபு கவுன்சில் சார்பில் முதல் வக்ஃபு மாநாடு
Perambalur King 24x7 |31 Aug 2024 3:54 PM GMT
பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு வக்ஃபு கவுன்சில் சார்பில் முதல் வக்ஃபு மாநாடு பெரம்பலூர் நகர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது, தமிழ்நாடு வக்ஃபு கவுன்சில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கம் மற்றும் அதனுடைய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மேலும் இதனை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்திரி தமிழ்நாடு வக்ஃபு கவுன்சில் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்றும், வக்ஃபு வாரியத்திற்கு உண்டான சொத்துக்களை முறையான ஆவணங்களை திரட்டி சொத்துக்களை மீட்டெடுக்கவும், மீட்கப்பட்டும் சொத்துக்களில் பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா அதாகி, விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் ராஜா, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story