போதிய விளைச்சல் இல்லாததால் இலவம் பஞ்சுமரங்களை அகற்றும் விவசாயிகள்

ஒரு கிலோ ரூபாய் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே லாபம் விவசாயிகள் கருத்து
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இலவம் பஞ்சு மரங்கள் விவசாயிகள் அதிக அளவு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே ஜீ. உசிலம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு இலவம் பஞ்சு மரங்கள் நடவு செய்து சாகுபடி செய்து வந்தனர் இந்தப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் காய்ப்பு தன்மையும் குறைந்து வந்தன. மேலும் இலவம் பஞ்சு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே இந்த சாகுபடியில் லாபம் கிடைக்கும் என்றும் தற்பொழுது ஒரு கிலோ 70 ரூபாய் கிடைக்கிறது என்றும் ,மேலும் மரங்களில் காய்ப்பு இல்லாத காரணத்தினால் தங்களுக்கு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும், இதனால் இந்த மரங்களை விவசாயிகள் இந்தப் பகுதிகளில் தற்பொழுது அகற்றி வருவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்
Next Story