கே.கே.அய்ய நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கே.கே.அய்ய நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கே.கே.அய்ய நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மழலையர் செல்வங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்த அறிவியல் கண்காட்சி
திண்டுக்கல் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கே.கே.அய்ய நாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் யூ.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கு கொண்டு தாங்கள் பயின்ற கல்வி களை அனுபவபூர்வமாக திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த கண்காட்சியில் தமிழ் மொழி , ஆங்கிலம் மொழி,அறிவியல் கண்டுபிடிப்புகள், கணினி பயன்பாடுகள்,பண்டிக்கைகள் என 12 வகையான கண்டுபிடிப்பை களை காட்சிப்படுத்தினர். இதில் மாணவ மாணவிகள் தாங்களின் படைப்புகள் குறித்து விளக்கங்கள் அளித்தனர். இந்த கண்காட்சியினை பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியினை எம்.எஸ்.பி. மேனிலைப் பள்ளி தாளாளர் முருகேசன் துவக்கி வைத்தார். நாடார் உறவின் முறையின் நிர்வாகிகள் சங்கரலிங்கம் , ராமதாஸ், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் பாலன் செய்திருந்தார்.
Next Story