குடிமைப் பணிகள் தேர்வு பதவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
Dindigul King 24x7 |31 Aug 2024 4:56 PM GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பதவிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு கூடங்களில் 16,950 தேர்வர்களும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு கூடங்களில் 369 தேர்வர்களும், பழனி வட்டத்தில் 21 தேர்வு கூடங்களில் 5,374 தேர்வர்கள் என மொத்தம் 83 தேர்வு கூடங்களில் மொத்தம் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வினை 9 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 8 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணிக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் 1 காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுதிறனாளிகளுக்கு கீழ்தளத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. தேர்வு மையங்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story