ஆரணி வடக்கு ஒன்றியத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
Arani King 24x7 |31 Aug 2024 5:41 PM GMT
ஆரணி, ஆக 31. ஆரணி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆரணி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராபாளையம், ரகுநாதபுரம், எம்.பி.தாங்கல், அரையாளம், ஆதனூர், காட்டேரி ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினர் சேர்க்கை இயக்க பயிலரங்கம் நடைபெற்றது. இதில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் ஆரணி சட்டமன்ற பொறுப்பாளர் சைதை வ.சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இதில் ஆரணி வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, ஆரணி வடக்கு மண்டலத்தின் உறுப்பினர் சேர்க்கை இயக்க பொறுப்பாளர் எம். மணிமாறன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டுஜி, வர்த்தகப்பிரிவு பழனி, ஒன்றிய செயலாளர் தாமோதரன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story