அரசு பேருந்தை மறித்து திமுகவினர் கடும் வாக்குவாதம்
Dindigul King 24x7 |31 Aug 2024 7:55 PM GMT
சின்னாளபட்டி பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தை மறித்து திமுகவினர் கடும் வாக்குவாதம்
சின்னாளபட்டிக்கு திண்டுக்கல்லிலிருந்து திண்டுக்கல் - ஆத்தூர், திண்டுக்கல் - கொடைரோடு, திண்டுக்கல் - சித்தயன்கோட்டை, - திண்டுக்கல் ஆகிய மார்க்கங்களில் வரும் நகரப்பேருந்துகள் சின்னாளபட்டிக்கு வந்து செல்கின்றன. சின்னாளபட்டியிலிருந்து கட்டிட வேலை, பெயின்டிங் வேலை மற்றும் இதர வேலைகளுக்காக பெண் தொழிலாளர்கள் நடுப்பட்டி, அம்பாத்துரை, சித்தயன்கோட்டை, ஆத்தூர், வத்தலக்குண்டு, செம்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள் அரசு பேருந்தில் சென்று வருகின்றனர். திண்டுக்கல்லிலிருந்து சித்தயன்கோட்டை செல்லும் 9எப் என்ற நகரப்பேருந்து சின்னாளபட்டி வந்து சித்தயன்கோட்டைக்கு செல்லும் போது பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் தொடர்ந்து நிற்காமல் சென்றதாகவும். இதனால் கூலி வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டனர். இதை கேள்விபட்டவுடன் சின்னாளபட்டி பேரூர்கழக துணைச்செயலாளர் ஜெயகிருஷ்ணன், பூஞ்சோலை 15வது வார்டை சேர்ந்த சைக்கிள் கடை மணி, திமுக நிர்வாகி தொப்பி பொம்மையா, மற்றும் வார்டு உறுப்பினர் ராஜூ, நாயக்கர் தெருவை சேர்ந்த திமுக நிர்வாகி செல்லையா ஆகியோர் 9எப் நகரப்பேருந்தை மறித்து பூஞ்சோலை நிறுத்தத்தில் நிற்காமலும், பெண் தொழிலாளர்களை ஏற்றாமலும் செல்வது குறித்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் வெள்ளிக்கிழமை மதியம் வண்டியைவிட்டு இறங்கிவிட்டார். நான் பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்லமாட்டேன் என உறுதி அளித்ததை அடுத்து பேருந்தை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story