ஆண்டிபட்டி அருகே சுரங்கப்பாதையில் மண் அகற்றும் பணிகள் தீவிரம்

ஆண்டிபட்டி அருகே சுரங்கப்பாதையில் மண் அகற்றும் பணிகள் தீவிரம்
.மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் 6 இடங்களில் சுரங்கப்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோட்டில் சுரங்க பாலத்தில் மழை நீர் குழியில் தேங்கி இருந்த மண் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் 6 இடங்களில் சுரங்கப்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மழைக் காலத்தில் தாழ்வான சுரங்க பாலத்தில் 3 முதல் 6 அடி வரை நீர் தேங்கி விடுகிறது. தேங்கும் நீர் பாலத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் குழி மூலம் தொட்டியில் தேக்கப்பட்டு மோட்டார் மூலம் வெளியேற்றப் படுகிறது. தொடர் மழை பெய்யும் போது பாலத்தின் அடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது.கடந்த சில மாதங்களாக மழை நீர் குழியில் மண் மூடியதால் தேங்கும் நீர் தொட்டிக்கு மழை நீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் பாலத்தில் நீண்ட நேரம் நீர் தேங்கி வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி ஏத்த கோயில் ரோட்டில் ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் குழியில் இருந்த மண் மற்றும் பாலத்தின் அடியில் தேங்கியிருந்த மண்ணை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. மண் அகற்றப்பட்டதால் மழையால் பாலத்தில் தேங்கும் நீர் தடையின்றி தொட்டிக்கு சென்று விடும். இதனை மோட்டார் மூலம் எளிதில் வெளியேற்றி பாதிப்பில்லாத போக்குவரத்துக்கு வழி ஏற்படும்.
Next Story